பாராளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற பாஜக முயற்சி.

by Editor / 18-03-2023 08:32:57am
பாராளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற பாஜக முயற்சி.

தமிழகத்தில் லோக்சபா தொகுதிகளில் ஆய்வு செய்ய, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர், இம்மாத இறுதியில் தமிழகம் வர உள்ளனர்.

வரும் 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் இரட்டை இலக்க எம்.பி.,க்களை பெற வேண்டும் என, பா.ஜ., களமிறங்கியுள்ளது. இதற்காக, இதுவரை நடந்த உள்ளாட்சி, சட்டசபை, பாராளுமன்றத்தேர்தல்களில், வார்டு வாரியாக பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்த தொகுதிகளை, அக்கட்சி அடையாளம் கண்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் தென்சென்னை, வேலுார், ஈரோடு, கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில்,தென்காசி உள்ளிட்ட பாராளுமன்றத் தொகுதிகளில், கட்சி வளர்ச்சிப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவற்றில், 9 தொகுதிகள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது.

அதற்காக, மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கிஷன் ரெட்டி,மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங்,உள்ளிட்டோர் பாஜக கவனம் செலுத்தவுள்ள தொகுதிகளின் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இருவரும் இம்மாத இறுதியில் சென்னை வருகின்றனர். அவர்கள், தாங்கள் பொறுப்பாளர்களாக உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு சென்று, 'பூத் கமிட்டி' அமைப்பு, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு, மத்திய அரசு திட்டப் பயன்கள் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர்.மொத்தத்தில் பாஜக பாராளுமன்றத்தேர்தல் பணி களை இப்போதே தொடங்கிவிட்டன.அதற்கான முன்னேற்பாடு பணிகளை கட்சி நிர்வாகிகள் மூலம் விரைவில் களமிறக்கபட உள்ளனர்.
 

 

Tags :

Share via