களக்காடு தீ விபத்தால்  வனவிலங்குகள் உயிரிழக்கவில்லை

by Editor / 06-07-2021 08:06:43pm
களக்காடு தீ விபத்தால்  வனவிலங்குகள் உயிரிழக்கவில்லை

நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் களக்காடு வனசரகம் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, வனத்துறையினரின் நடவடிக்கையால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து தீ விபத்தினால் கருகிய பகுதிகளை புலிகள் காப்பக துணை இயக்குநர் அன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு அவர் அளித்த பேட்டியில், தீ விபத்தினால் 2 ஹெக்டேர் பரப்பரளவுக்கு புற்கள் மட்டுமே எரிந்துள்ளதாக கூறினார். மேலும், தீ விபத்தால் மரங்களுக்கும், வனவிலங்குகளுக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை எனக்கூறிய அவர், மின்னல் தாக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார்.
 

 

Tags :

Share via