புதிய சுங்கக் கட்டணம் மார்ச் 31 நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

புதிய நிதியாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் டோல் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய சுங்கக் கட்டணம் மார்ச் 31 நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. தற்போது வசூலிக்கப்படும் சுங்கச்சாவடி கட்டணத்தில் 10 முதல் 15 ரூபாய் வரை உயரும். புதிய கட்டண பட்டியல் மார்ச் 30ம் தேதி வெளியிடப்படும். சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தினால் அது அனைவரையும் பாதிக்கும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Tags :