ஏப்ரல் 17ம் தேதி முதல் மாஸ்க் கட்டாயம்
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தேவையான தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 11000க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 17ம் தேதி முதல் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம். தனிமனித இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :