காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தானியர் என்கவுன்டர்

by Staff / 01-06-2023 02:03:02pm
காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தானியர் என்கவுன்டர்

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வியாழன் அதிகாலை 2.50 மணியளவில் சம்பா செக்டரில் உள்ள மங்கு சக் பார்டர் அவுட்போஸ்டில் ஒருவர் சட்டவிரோமாக நுழைந்து கொண்டிருந்தார். அவரைக் கண்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் எச்சரித்தனர். எனினும், அவர் அதனை பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய முயன்றார். இதனை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்ததாக பிஎஸ்எஃப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். உயிரிழந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories