கோவத்தில் மைக்கை தூக்கி எறிந்த ராஜஸ்தான் முதல்வர்

by Staff / 04-06-2023 02:08:19pm
கோவத்தில் மைக்கை தூக்கி எறிந்த ராஜஸ்தான் முதல்வர்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மைக் சரியாக வேலை செய்யாததால் கோபமடைந்து, கலெக்டரை நோக்கி மைக்கை வீசிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. பார்மரில் நடந்த பொது நிகழ்ச்சியின்போது முதல்வர் அசோக் கெலாட் நாற்காலியில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தபோது, ஹேண்ட் மைக் திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால் எரிச்சல் அடைந்த அவர், பார்மர் மாவட்ட ஆட்சியர் நின்றிருந்த பக்கம் மைக்கை கோபமாக எறிந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

 

 

Tags :

Share via

More stories