ஒடிசா விபத்து: ரயில் சேவை துவக்கம்

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்ட பயங்கர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று வரை 90 ரெயில்கள் ரத்தான நிலையில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று முதல் ரெயில் சேவை துவங்கியுள்ளது. மேலும் 123 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், 56 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
Tags :