by Staff /
12-07-2023
05:25:46pm
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கனமழையின் காரணமாக யமுனை ஆற்றின் நிர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தடுக்க மழை பாதித்த இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், யமுனை ஆற்றில் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags :
Share via