பாலியல் உறவுக்கான வயதை குறைக்கலாம் - நீதிமன்றம் கருத்து

by Staff / 14-07-2023 02:01:30pm
பாலியல் உறவுக்கான வயதை குறைக்கலாம் - நீதிமன்றம் கருத்து

பாலியல் உறவுக்கான சம்மத வயதை குறைக்கலாம் என மும்பை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் 17 வயது சிறுமியை கற்பழித்ததாக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து வாலிபர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, திருமண வயதை எட்டிய உடன் மட்டும் பாலியல் உறவுகள் நடப்பதில்லை. இந்த விவகாரத்தில் உலகம் முழுவதும் நடப்பதை நாடும், நாடாளுமன்றமும் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via