சட்டவிரோத மது விற்பனை ஏழு பேர் கைது

by Staff / 17-07-2023 02:06:50pm
சட்டவிரோத மது விற்பனை ஏழு பேர் கைது

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையை தடுப்பதற்காக கரூர் எஸ் பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி நேற்று கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மகாதானபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து, வேலா யுதம்பாளையத்தைச் சேர்ந்த குழந்தை அம்மாள் திண்டுக்கல்லை சேர்ந்த சுரேஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து அவர்களிடமிருந்து 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories