உளவு பார்த்த விவகாரத்தை கண்டித்து காங்கிரஸ் பேரணி
பெகாசஸ் உளவு பார்த்த விவகாரத்தில் மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடந்தது.
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் மோடி அரசு பலரையும் உளவு பார்த்துள்ளது என காங்கிரஸ் கட்சியினர் இன்று சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். பேரணி முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார். அவர் கூறுகையில், “மோடி அரசு பெகாசஸ் மூலம் பல அரசியல் பிரபலங்கள், ஊடகவியலாளர்களை உளவு பார்த்துள்ளது.
உளவு பார்க்க அனுமதி அளித்ததன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்த்து உள்ளது மோடி அரசு. இதற்கான மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ராஜினாமா செய்ய வேண்டும். நம்மை பாகுபலியாகுங்கள் என்கிறார் பிரதமர். என்ன பிரயோஜனம்? நமது ராணுவத்தில் நடப்பதை பாகிஸ்தானும் சீனாவும் வேவு பார்க்கவா? பெகாசஸ் விவகாரம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியும் பிரதமரும் உள்துறை அமைச்சரும் இதுவரை மறுப்புத் தெரிவிக்கவில்லை” எனப் பேசினார்.
Tags :