முதல்வரின் ட்வீட் நீக்கம் - விளக்கம் கேட்டு கடிதம்
தமிழ்நாட்டில் இருந்து பெண் ஒருவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றது தொடர்பாக ராணுவம் தரப்பில் பதிவிட்ட ட்வீட்டை மேற்கோள் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்த நிலையில், திடீரென ராணுவம் அந்த பதிவை நீக்கியது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப உள்ளதாக சென்னை மண்டல பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் இன்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து பதிவை ராணுவம் நீக்கியதன் பின்னணி என்ன? என திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
Tags :