வரதட்சணை கொடுமை மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் குடும்பத்துடன் தலைமறைவு.?

by Editor / 22-08-2023 08:58:17am
வரதட்சணை கொடுமை மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் குடும்பத்துடன் தலைமறைவு.?

சேலம் மாவட்டம் மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர்  சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மருமகள் வரதட்சணை புகார் கொடுத்தார். இதன் பேரில் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் சதாசிவம் அவரது குடும்பத்தினர் தலைமறைவானார்கள்.

சேலம் சூரமங்கலம் அருகே உள்ளது சர்க்கார் கொல்லப்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் மனோலியா (வயது 24).இவருக்கும்சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்தின் மகன் சங்கருக்கும் கடந்த 2019 ம் வருடம் திருமணம் நடந்தது.தற்போது இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி சந்தோசமாக இருந்து வந்தனர் .ஆனால் பின்னர் சங்கர் ,அவரது மனைவி மனோலியாவை தகாத வார்த்தைகளால் பேசியும், அடித்தும் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்மனோலியா சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் வந்து புகார் மனு செய்தார்.இந்த புகார் மனுவில் தனது கணவர் சங்கர் மற்றும் மாமனார் சதாசிவம் ,மாமியார் பேபி நாத்தனார் கலைவாணி ஆகியோர் தன்னை வரதட்சணை பணம்கேட்டு கொடுமை செய்து வந்ததாகவும், திருமணத்தின்போது 200 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.ஆனால் தொடர்ந்து தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகவும் இதனால் மனதளவிலும் உடலளவிலும் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளதாகவும், தனது பெண் குழந்தையுடன் தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் புகார் மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த புகார் மனுவின் மீது சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .இதனை அறிந்த மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர் .

 

Tags : பாமக சட்டமன்ற உறுப்பினர் தலைமறைவு.?

Share via