ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையை தடுக்காதது ஏன்? - அன்புமணி

by Staff / 09-11-2023 05:06:06pm
ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையை தடுக்காதது ஏன்? - அன்புமணி

சட்டத்தை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, அளவுக்கு அதிகமாக கனிவு காட்டினால், அவற்றின் விதிமீறல்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கான காரணம் என்ன? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத் தயாராக இருக்கும் நிலையில், அவர்களின் தேவைகளை பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் பயணக் கட்டணத்தை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தியுள்ளன. சென்னையிலிருந்து நாளை மதுரை செல்வதற்கான கட்டணம் ரூ. 3200, நெல்லைக்கான கட்டணம் ரூ. 3400, கோவைக்கான கட்டணம் ரூ. 3999 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via