காதலிக்க மறுத்த பெண்ணை சுட்ட சிறுவன்

by Staff / 19-01-2023 12:06:17pm
காதலிக்க மறுத்த பெண்ணை சுட்ட சிறுவன்

உபியில் கடந்த புதன்கிழமை 15 வயது சிறுவன் ஒருவன் பெண்னை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உபி பதோகி பகுதியை சேர்ந்த ஆனந்த் விஸ்வகர்மா என்ற சிறுவன், அனுராதா பிந்த் என்ற சிறுமியை காதலித்து வந்திருக்கிறான். ஆனால் அந்த சிறுமி, சிறுவனின் காதலை ஏற்க மறுத்த நிலையில், அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். இதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தப்பி சென்ற சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo