ராஜஸ்தான் மக்களே புதிய சாதனை படையுங்கள் : மோடி

by Staff / 25-11-2023 01:05:29pm
ராஜஸ்தான் மக்களே புதிய சாதனை படையுங்கள் : மோடி

ராஜஸ்தானில் இன்று (நவம்பர் 25) 199 தொகுதிக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, இன்று நடக்கும் தேர்தலுக்காக 51,756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மக்கள் அதிக அளவில் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும் என பிரதமர் மோடி தனது சமூகவலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via