வேதாரண்யத்தில் அதிகரிக்கும் கரோனா தொற்று: கண்காணிப்பு தீவிரம்
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அது தொடர்பான கண்காணிப்புடன் கூடிய தடுப்புப் பணிகள் இன்று (ஆக 3) தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம், கள்ளிமேடு, தேத்தாக்குடி, கரியாப்பட்டினம் என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரோனா தொற்று அண்மை நாள்களாக உறுதிப்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கோடியக்கரை பகுதியில் 3 வயது சிறுவன் உள்பட 7 பேருக்கும், மருதூரில் ஒரே குடும்பத்தில் ஆறு பேருக்கும் திங்கள்கிழமை தொற்று உறுதியானது.
இதேபோல, வாய்மேடு, மருதூர் வடக்கு உள்ளிட்ட இடங்களில் 12 பேருக்கு செவ்வாய்க்கிழமை தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவ முகாம்கள், பரிசோதனை முகாம்கள், சிசிச்சை முகாம்கள் என தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் பரிசோதனை முகாமை ஊராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
Tags :