டெல்லி செல்ல வந்த பள்ளி மாணவர் பர்ஸில் துப்பாக்கி குண்டு: விமான நிலையத்தில் பரபரப்பு

by Admin / 05-08-2021 01:30:42pm
டெல்லி செல்ல வந்த பள்ளி மாணவர் பர்ஸில் துப்பாக்கி குண்டு: விமான நிலையத்தில் பரபரப்பு



டெல்லிக்கு செல்ல வந்த கொலம்பியா நாட்டு மாணவரின் பா்ஸ்சில் துப்பாக்கி குண்டு இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
 
சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து டில்லி செல்லும்  விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமானம் நேற்று புறப்பட தயாரானது. அதில் பயணிக்க வந்த பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினா். அப்போது 19 வயது மாணவா் ஒருவா் (லூயீஸ்) இந்த விமானத்தில் டில்லி செல்ல வந்தாா்

. அவரை பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடெக்டா் மூலம் பரிசோதித்தனா். அப்போது அவரிடம் வெடி குண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து அதிா்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தனியே அழைத்து மீண்டும் சோதனையிட்டனா்.

 அப்போது அவருடைய ஜீன்ஸ் பேண்ட்  பாக்கெட்டிலிருந்த பா்ஸ்சில் எதோ ஆட்சேபகரமான பொருள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அந்த பா்ஸ்சை எடுத்து பாதுகாப்பாக திறந்து பாா்த்தனா். அதனுள் .25mm ரக துப்பாக்கு குண்டு ஒன்று லைவ்வாக இருந்தது. இதையடுத்து துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள் மாணவரின் பயணத்தையும் ரத்து செய்தனா்.

அதன்பின்பு மாணவரை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினா். அப்போது கொலம்பியா நாட்டை சோ்ந்த அந்த பாணவா்,செங்கல்பட்டு மாவட்டம் OMR சாலையில் உள்ள சிறுசேரியில் அம்மா, தங்கையுடன் தங்கியிருக்கிறாா்.அங்குள்ள ஒரு இண்டா் நேஷ்னல் பள்ளியில் பிளஸ் டூ படிக்கிறாா்

. இவா்களுடைய விசா நீடிப்பு சம்பந்தமாக டில்லியில் உள்ள கொலம்பியா நாட்டு தூதரகத்தில் ஒரு சான்றிதழ் வாங்குவதற்காக மாணவா் தற்போது டில்லி செல்கிறாா். மேலும் மாணவரின் நண்பா் ஒருவரின்  தாத்தா முறையான உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்தாா். அவா் 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

 அதையடுத்து அவரின் துப்பாக்கியை, குடும்பத்தினா் முறைப்படி அரசிடம் ஒப்படைத்தனா். அப்போது மாணவரின்  நண்பா் தாத்தா நினைவாக 2 லைவ் குண்டுகளை எடுத்து வைத்திருந்தாா். அதில் ஒன்றை இவரிடம்  கொடுத்தாா். மாணவா் தனது பா்ஸ்சில் பாதுகாப்பாக வைத்து கொண்டாா். அதன்பின்பு தற்போது தான் முதல் முறையாக விமான பயணத்திற்காக சென்னை விமானநிலையம் வந்தாா். இங்கு நடந்த சோதனையில் சிக்கிக்கொண்டாா்.

இதையடுத்து பாதுகாப்பு படையினா், பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டுடன் மாணவரை  சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா். போலீசாா் அவரிடம் நீண்ட விசாரணை நடத்தினா். அதோடு அவா்  கூறுவதெல்லாம் உண்மையா?என்றும் ஆய்வு செய்தனா்

அப்போது மாணவா்  கூறுவது உண்மை தான் என்று தெரியவந்தது. இதையடுத்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். இந்நிலையில் மாணவா்  அறியாமல் இந்த தவறை செய்ததாலும்,பள்ளி மாணவராக இருப்பதாலும்,அவருடைய எதிா்கால நலன் கருதி,அவரை மன்னித்து விடுவிக்க முடிவு செய்தனா்

அதோடு இந்த துப்பாக்கி குண்டு தவறுதலாக வெடித்திருந்தால், அதனால் என்ன ஆபத்துகள் எற்படும் என்பதை தெளிவாக எடுத்து கூறினா். அதன்பின்பு அவரை கடுமையாக எச்சரிக்கை செய்து, மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய பின்பு விடுவித்தனா்.

 

Tags :

Share via