பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

by Staff / 14-04-2024 12:00:48pm
பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் வெளியிட்டார். ‘சங்கல்ப் பத்ரா’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை டெல்லியில் உள்ள தேசிய தலைமையகத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல், பொது வாக்காளர் பட்டியல், அடுத்த 5 ஆண்டு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும், 2025 பழங்குடியினரின் ஆண்டாக கடைப்பிடிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பிடித்துள்ளன.

பாஜகவின் வாக்குறுதிகள்

* 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்தியர்களும் 5 லட்சம் மருத்துவக் காப்பீட்டுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வருவார்கள்.

* மக்கள் மருந்தகங்களில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள்

* ஒரே மாதிரியான குடிமைச் சட்டம் (யுசிசி) அமல்படுத்தப்படும்.

* இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும்.

* ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் பொதுவான வாக்காளர் பட்டியல் முறை அறிமுகப்படுத்தப்படும்.

* சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் கிராமங்களில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் திருநங்கைகள் இணைக்கப்படுவர்.

* இந்தியாவின் கௌரவமான தமிழ்மொழி வளர்க்கப்படும்.

 

Tags :

Share via