கடும் வறட்சியிலும் 31 லட்சத்தை தாண்டிய ஆவின் பால் கொள்முதல்

by Staff / 28-05-2024 03:39:29pm
கடும் வறட்சியிலும் 31 லட்சத்தை தாண்டிய ஆவின் பால் கொள்முதல்

கடும் வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31 லட்சத்தை தாண்டியுள்ளது என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், கடுமையான நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மூலம் ஆவின் ஒரு நிலையான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை‌ உருவாக்குவோம். முதல்வரின் தொலை நோக்கு பார்வையான வெண்மை புரட்சியை ஏற்படுத்துவோம் என பதிவிட்டுள்ளார். விவசாயிகள் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo