பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களின் 86வது பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்

by Staff / 26-07-2024 12:53:39pm
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்  ராமதாஸ் அவர்களின் 86வது பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்

விருதுநகரில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்களின் 86வது பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில்  அறிவுசார் குறையுடையோர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சாட்சியாபுரத்தில் இயங்கி வரும் அறிவுசார் குறையுடையோர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில்  மதிய உணவு வழங்கப்பட்டது.

அதற்கு முன்பாக பள்ளியில் பயிலும் மாணவ ,மாணவிகள் மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்களின் 86வது பிறந்தநாருக்கு வாழ்த்துக்களை சொல்லி கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்டது 

மேலும் இந்த நிகழ்வின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செயற்குழு உறுப்பினர் விக்டர் ஞானராஜ் மாவட்டத் துணைச் செயலாளர் காளி ராஜன் மாவட்ட தொழிற்சங்க தலைவர் கருப்பசாமி மாவட்ட இளைஞரணி தலைவர் சிவா மாநகர இளைஞரணி செயலாளர் செல்வகுமார் சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் சிவகாசி கிழக்கு ஒன்றிய தலைவர் முத்து பாண்டியன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டி மற்றும் மாவட்ட முன்னாள் பொருளாளர்  இந்திரா தேவி மற்றும் பல நிர்வாகிகள்  உடன் இருந்தனர்
 

 

Tags :

Share via