இனி காலை வணக்கத்திற்கு பதிலாக "ஜெய் ஹிந்த்"

ஹரியானா மாநில கல்வித்துறை ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஆகஸ்ட் 15 அன்று, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் 'காலை வணக்கம்' என்பதற்கு பதிலாக 'ஜெய் ஹிந்த்' என்று கூறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசபக்தி, மரியாதை மற்றும் ஒற்றுமை உணர்வுகளை வளர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :