கர்நாடக முதல்வர் சித்தராமையா ஊழல்வழக்கு - ஆளுநர் அனுமதி வழங்குவதற்கு அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது ஊழல் தடுப்புச் சட்டம் 17a மற்றும் பாரதிய நாகரி க் சுரக்ஷா சங்கீத் 218 ஆவது பிரிவின் கீழ் வழக்கு தொடர அனுமதி வழங்கிய ஆளுநர் முடிவை எதிர்த்து முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.. மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணையத்தின் ஊழல் குறித்தான புகாருக்கு ஆளான முதல்வர் மீது புகார் தாரர்கள் புகாரை பதிவு செய்வது அல்லது ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது நியாயமானது என்று நீதிபதி எம். நாகப்பிரசனா அடங்கிய தனி நீதிபதி பென்ச் கூறியது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17 -வது பிரிவின் கீழ் ஒப்புதல் பெறுவது புகார் தாராின் கடமை என்றும் இதற்கு ஆளுநர் அனுமதி வழங்குவதற்கு அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது என்றும் பென்ச் கூறியது.
Tags :