மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்

by Editor / 30-10-2024 10:31:57am
மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் வெங்கல சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவரது திருவுருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.நிகழ்வில் அமைச்சர்கள்  பி.மூர்த்தி, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு.

 

Tags : மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்

Share via