ஒழுங்கு முறை விற்பனை கூடம்-விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள்
விலை வீழ்ச்சி காலங்களில் விற்பனையை தவிர்ப்பதற்காக விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம், வியாபாரிகளுக்கு ரூ.2 லட்சம் பொருளீட்டு கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென திருப்பூர்-கலெக்டர் வினீத் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடுமலை, பெதப்பம்பட்டி, திருப்பூர், வெள்ளகோவிலில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மக்காசோளம், சோளம், தேங்காய் பருப்பு ஆகியவற்றை தரம் பிரித்து விற்பனை செய்ய, தரம் பிரிப்புக்கான எந்திரம் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
விவசாயிகள், விளைபொருட்களை இருப்பு வைக்கும் வகையில், 59 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. விலை வீழ்ச்சி காலங்களில் விற்பனையை தவிர்ப்பதற்காக விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம், வியாபாரிகளுக்கு ரூ.2 லட்சம் பொருளீட்டு கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.
பூ, காய்கறி, பழங்களை குறைந்த வாடகைக்கு இருப்பு வைத்து பின்னர் விற்று கொள்ளும் வகையில் பொங்கலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 50 மெட்ரிக் டன் மற்றும் பல்லடம், அவிநாசி, உடுமலை, வெள்ளகோவில் ஆகிய நான்கு விற்பனை கூடங்களில் தலா 25 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு உள்ளது. இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ள 94879 05734, 95661 69829 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :