நகை திருடிய மத்திய பிரதேச கொள்ளையர்கள் கைது

கோவில்பாளையம் பகுதியில் வசிக்கும் பாலசுப்பிரமணியன் (56) என்பவர் தனது பெற்றோரை பார்க்க பொள்ளாச்சிக்குச் சென்று விட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.
விசாரணையில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹிம்மத் சிங் (30), ராகுல் சோனி (34), யாஷ் சோனி (26), சுனில் கமல் சிங் அலவா (30) மற்றும் முகேஷ் கியான்சிங் பூரியா (29) ஆகியோர் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. கீரணத்தம் பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற காவல்துறையினரிடமிருந்து மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
பின்னர் 6 பேரையும் நேற்று (மார்ச் 3) கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து திருட்டு நகைகள் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags :