பைக் மீது கார் மோதி விபத்து: 2 வாலிபர்கள் பலி

by Editor / 31-03-2025 02:55:45pm
பைக் மீது கார் மோதி விபத்து: 2 வாலிபர்கள் பலி

நெல்லை மாவட்டம் இலந்தைகுளத்தை சேர்ந்த பட்டத்தேவர் மகன் மாரி பாண்டி (40). நெல்லையைச் சேர்ந்த சொக்கநாதர் சுடலை கண்ணு மகன் சின்னதுரை (35). நண்பர்களான இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்தோப்பு அருகே வரும் போது, எதிரே திருச்செந்தூரிலிருந்து வந்த கார் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரி பாண்டியும் சின்னதுரையும் சாலையில் விழுந்தனர். அப்போது அடுத்தடுத்து வந்த 2 கார்கள் இருவர் மீதும் மோதியதால் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் பிள்ளை மற்றும் போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த இருவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கார் ஓட்டுநர்களான புதுச்சேரியை சேர்ந்த ரங்கசாமி மகன் லோகேஷ், மற்றும் மதுரை வெங்கடேஷ் கிருஷ்ணராஜ் ஆகிய 3பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via