ஓபிஎஸ் - ஈபிஎஸ் தாக்கல் செய்த  மனுக்கள் தள்ளுபடி

by Editor / 24-08-2021 04:21:49pm
ஓபிஎஸ் - ஈபிஎஸ் தாக்கல் செய்த  மனுக்கள் தள்ளுபடி

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியை கடந்த ஜூன் 14ம் தேதி கட்சியிலிருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். இது சம்பந்தமான அறிக்கை தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கோரி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் புகழேந்தி.


இதையடுத்து, இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதால் வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தனர்.


ஆனால், ஆஜராக விலக்கு அளிக்கக் கோரிய ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், செப்டம்பர் 14ம் தேதி ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆகிய இருவரும் ஆஜராக நீதிபதி அலீசியா உத்தரவிட்டார்.

 

Tags :

Share via