கஞ்சா கடத்திய இருவர் கைது - 74 கிலோ கஞ்சா,கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்.

மரக்காணம் அருகே நல்லாளம் கூட்டுசாலை பகுதியில் காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது அவ்வழியே வந்த காரை மடக்கி சோதனை செய்ததில், கார் டிக்கியில் இருந்த 74 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கஞ்சா கடத்தி வந்த சென்னையை சேர்ந்த மதன் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து ராமநாதபுரம் எடுத்து செல்ல முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags : கஞ்சா கடத்திய இருவர் கைது - 74 கிலோ கஞ்சா,கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்.