டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நரம்பு நோய் இருப்பதாக தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு 'Chronic Venous Insufficiency' எனப்படும் நரம்பு நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மருத்துவப் பரிசோதனையில் ட்ரம்ப்பின் உடல்நிலை சீராக இருப்பதாக வெள்ளை மாளிகை தற்போது தெரிவித்துள்ளது. இந்த நோயானது நரம்புகளில் ரத்தம் தேங்குவதன் மூலம் ஏற்படுகிறது. நரம்புகளில் உள்ள வால்வுகள் பலவீனமடையும் போது அல்லது சேதமடையும் போது ஏற்படும்.
Tags :