தவெக 2ஆவது மாநில மாநாடு வெயிலின் தாக்கத்தால் 300க்கும் மேற்பட்டோர் மயக்கம்.

மதுரையில் தவெக 2ஆவது மாநில மாநாடு இன்று (ஆக.21) மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வெயிலின் தாக்கத்தால் 374 பேர் மயங்கிய நிலையில், அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. அதிலும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத 12 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை முதலே தொண்டர்கள் மாநாடு நடைபெறும் திடலில் குவிந்துள்ளனர். குழந்தைகளை மாநாட்டுக்கு அழைத்து வர வேண்டாம் என கட்சி தலைமை அறிவுறுத்தியும் பலரும் குழந்தைகளோடு வந்தனர்.
Tags : தவெக 2ஆவது மாநில மாநாடு வெயிலின் தாக்கத்தால் 300க்கும் மேற்பட்டோர் மயக்கம்.