ஹோர்முஸ் ஜல சந்தி நெருக்கடி குறித்த உச்சி மாநாடு
ஹோர்முஸ் ஜல சந்தி நெருக்கடி குறித்த உச்சி மாநாடு இங்கிலாந்து தலைமையில் 60க்கு மேற்பட்ட நாடுகள் காணொளி காட்சி வாயிலாக இணைந்து நடத்தின. சர்வதேச அமைப்புக்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றன இதில் பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி கனடா ஜப்பான் மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளும் அடங்கும். ஜன சந்தியை மூடியிருப்பதன் காரணமாக உலகளாவிய வளர்ச்சிக்கு ஓர் அச்சுறுத்தல் நிகழ்ந்துள்ளதாக இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது இது எரிசக்தி பாதுகாப்பு உணவு விநியோக சங்கிலி மற்றும் சர்வதேச வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளதாகவும் எடுத்துரைக்கப்பட்டது. இந்தியா சார்பாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி இக்கூட்டத்தில் உரை வழங்கினார். சர்வதேச நீர் வழிகளில் தடையற்ற போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவம் இதில் வலியுறுத்தப்பட்டது ஈரான் மோதலில் மாலுமிகளை இழந்த ஒரே நாடு இந்தியா என்பதை அவர் சுட்டிக் காட்டியதோடு மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். பதற்றத்தை கணிப்பதும் பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் ரீதியான தீர்வுகளும் தற்போதைய நெருக்கடியில் இருந்து வெளியேற வடிவமைக்கும் என்றும் அவர் வலியுறுத்தி ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் காரணமாக இந்த சலசந்தி பிப்ரவரி 2026 இல் இருந்து மூடப்பட்டுள்ளது. இது உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் மிகப்பெரிய ஒரு பாதிப்பை உருவாக்கி உள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
Tags :



















