ரூ.25 கோடி மோசடி செய்த தவெக நிர்வாகி கைது
புதுக்கோட்டையில் சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ரூ.25 கோடி வரை மோசடி செய்த தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது பிடிபட்டுள்ளார். பல காரணங்களை கூறி பல கோடி ரூபாய் சுருட்டிய அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















