மத்திய அமைச்சரவை ஜூன் இரண்டாவது வாரத்தில் மாற்றி அமைக்கப்படலாம் .
மத்திய அமைச்சரவை ஜூன் இரண்டாவது வாரத்தில் மாற்றி அமைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பாஜக உயர்மட்ட குழு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் சந்திப்புக்கு பிறகு இந்த மாற்றம் நிகழக்கூடும் என்று தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 12 அமைச்சர்கள் செயல்பாடுகளில் திருப்தியின்மை காரணமாக மாற்றப்படலாம் என்று தெரிகிறது ரயில்வே, நிதி, தகவல், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட துறைகளில் இருந்து இந்த மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது., ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் உள்ள அமைச்சர்களின் பதவிகள் மாற்றப்படுவதோடு 70 வயதிற்கு மேற்பட்ட அமைச்சர்களும் விடுவிக்கப்பட்டு கட்சி பணிக்கு அனுப்பப்படலாம். பஞ்சாப் ,குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் 2027-இல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இந்த மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது .தேர்தல் வரவுள்ள மாநிலங்களில் கூடுதல் பிரதிநிதிகள்., இளைஞர்க,ள் பெண்கள் பங்கேற்கும் பொருட்டு மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. கூட்டணியில் பங்கேற்றுள்ள தெலுங்கு தேசம், நிதீஷ் குமாரின் ஜேடி (யு) கட்சிக்கும் முக்கியத்துவம் வழங்கப்படலாம்.
Tags :



















