மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும்குற்றச்சாட்டு
சட்டப் பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட புதிய பொருட்களின் குழப்பம் மற்றும் பயன்பாடு முற்றிலும் குறையவில்லை என்றும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் மாதாந்திர அடிப்படையிலே இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என இலக்கு நின்னு இருப்பதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் விதிகளை மீறுபவர்களை கண்டுப்பதில் தவறில்லை ஆனால் இலக்கு எட்டுவதற்காக பொதுமக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது என்றும் போக்குவரத்து போலீசார வசூலிக்கப்படும் அபராத தொகை முறையாக அரசு கருவூலத்திற்கு செல்லாமல் காவல் நிலைய அளவிலேயே முடக்கப்படுவதாகவும் புகார் எழுந்து உள்ளதாக தெரிவித்ததோடு சென்னை மாநகர காவல் ஆணையர் 10 காவல் நிலையங்களில் அவராத வசூலிக்க தடை விதித்து உள்ளதாகவும் வந்த செய்தியை குறிப்பிட்டு இந்த முறைகேடு சென்னை மட்டும் தானா? அல்லது தமிழகம் முழுவதும் நீடிக்கிறதா? என்பது குறித்து டிஜிபி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் போதிய கால அவகாசத்திற்குள் குற்ற வழக்குகளில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு களவு ,கொலை, கொள்ளை தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தன்னுடைய தோட்டத்தில் உள்ள கிணற்றில் வயர்களை எல்லாம் களவாடி சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
Tags :


















