ஓடி ஓடி உழைக்கனும் வடிவமைத்து கொடுத்த புலமைப்பித்தன்

by Editor / 08-09-2021 10:24:27am
 ஓடி ஓடி உழைக்கனும் வடிவமைத்து கொடுத்த புலமைப்பித்தன்

 கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 1 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 86.

1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்த அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்த எம்ஜிஆர், முதலில் திமுகவில் தான் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் கட்சியில் நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக., திமுகவில் இருந்து விலகி அதிமுக என்னும் கட்சியை ஆட்சி 1972 ஆம் ஆண்டில் தொடங்கினார். அப்போது, அவருக்கு உறுதுணையாக இருந்த முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் இந்த புலவர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர் புதிதாக கட்சியை துவக்கினாலும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதை நிறுத்தவில்லை.அப்போது, புலவர் புலமைப்பித்தன் எம்ஜிஆரின் படங்களுக்கு எம்.ஜி.ஆர் பார்முலா பாடல்களை எழுதிய பெருமைக்கு சொந்தக்காரர்.. கட்சி தொடங்கிய சமயத்தில் அவருக்கு அரசியல் கருத்தை தன்னுடைய பாடலில் வடிவமைத்து கொடுத்தவர். குறிப்பாக ஓடி ஓடி உழைக்கனும்.. என்னும் பாடல் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்றது.. சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே (உலகம் சுற்றும் வாலிபன்) 1973ம் ஆண்டு வெளியானது.. அதே போல "நீங்க நல்லா இருக்கணும்..நாடு முன்னேற.. என இவரது பல பாடல்கள் இன்றுவரை தொடர்ந்து ஹிட்டடித்து வருகிறது. இதுபோன்ற பல அரசியல் கருத்துக்களை கொண்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். இந்நிலையில் 86 வயதில் உயிரிழந்த இவருக்கு அதிமுக திமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தங்களுடைய இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via