காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து ஒருவர் பலி

காஷ்மீரில் மோசமான வானிலை மற்றும் பனி மூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காஷ்மீரில் உள்ள பதம்பூர் மாவட்டம் ஷிவ்கர்தர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டது.
அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. மோசமான வானிலை மற்றும் பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையும் படியுங்கள்...சாமியார் நரேந்திர கிரி மர்ம மரணம்- சி.பி.ஐ. விசாரணை கேட்டு அலகாபாத் கோர்ட்டில் வழக்கு
Tags :