பள்ளிக்கல்வித்துறை உத்தரவு 

by Admin / 03-12-2021 10:38:46pm
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு 

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு 

வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸ் விழிப்புணர்வு & நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்

பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்

அனைத்து வகை பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்

1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்

நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம்

பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக் கூடாது

ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்

மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்

வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

நீச்சல் குளங்களை மூட வேண்டும்

இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்

நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

Tags :

Share via