மதுரையில் 20ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்

by Editor / 19-02-2022 05:15:03pm
மதுரையில் 20ஆம் தேதி முதல்  போக்குவரத்து மாற்றம்


மதுரை மாநகரில் பறக்கும் பாலம் கட்டுமானப் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக போக்குவரத்து மாறுதல்கள் செய்யப்பட்டது. பொதுமக்களின் வசதிக்காக கட்டுமானப் பாலங்களின் பக்கவாட்டு சாலைகளை விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பறக்கும் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடையும் வரை அழகர்கோவில் சாலை நவநீதகிருஷ்ணன் கோவில் வீதி சந்திப்பு முதல் அவுட் போஸ்ட் வரை இருவழிப்பாதை சாலையாக வருகின்ற 20.02.2022 (ஞாயிறு) முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கீழ்க்கண்டவகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை தல்லாகுளம் கோகலே ரோடு வழியாக ஐயர்பங்களா/புது நத்தம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றங்கள் எதுவுமின்றி அதே வழித்தடத்தில் வழக்கம் போல் செல்ல வேண்டும். PTR சிலை சந்திப்பில் இருந்து பாண்டியன் ஹோட்டல் சந்திப்பிற்கு செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை. பி.பி.குளம் சந்திப்பு. வடமலையான் மருத்துவமனை பகுதிகளிலிருந்து கோரிப்பாளையம் செல்லும் வாகனங்கள் PTR சிலை வழியாக பாண்டியன் ஹோட்டல் செல்ல அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் SP பங்களா சந்திப்பு, தாமரைத் தொட்டி சந்திப்பு வழியாக செல்லவேண்டும். அழகர்கோவில் மற்றும் மேலூர் சாலை மார்க்கம் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் இனிமேல் விஷால் டி மால் வழியாக செல்லஅனுமதி இல்லை.

அழகர்கோவில் சாலை பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோகலே சாலை வழியாக வந்து கோகலேரோடு -நவநீதகிருஷ்ணன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தல்லாகுளம் பெருமாள் கோவில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, அழகர்கோவில் ரோடு - அம்பேத்கார் சிலை சந்திப்பு வழித்தடமாக பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வந்தடைந்து அங்கிருந்து நேராக அழகர் கோவில் சாலை பகுதிக்கு செல்லவேண்டும். மேலூர் சாலை பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோகலே சாலை வழியாக வந்து கோகலே ரோடு - நவநீதகிருஷ்ணன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தல்லாகுளம் பெருமாள் கோவில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, அழகர் கோவில் ரோடு - அம்பேத்கார் சிலை சந்திப்பு வழித்தடமாக பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வந்தடைந்து அங்கிருந்து வலதுபுறம் திரும்பி யூத் ஹாஸ்டல் வழியாக கக்கன் சிலை வந்தடைந்து மேலூர் பகுதிகளுக்கு செல்லவேண்டும். சாலை அதேபோல் அழகர்கோவில் சாலையிலிருந்து தாமரை தொட்டி சந்திப்பினை கடந்து தல்லாகுளம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வந்து அங்கிருந்து இடதுபுறமாக யூத் ஹாஸ்டல், கக்கன் சிலை சந்திப்பினில் வலதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை வழியாக அவுட்போஸ்ட் சந்திப்பு வழியாக தல்லாகுளம், தமுக்கம் மற்றும் கோரிப்பாளையம் செல்லவேண்டும். மேலூர் சாலையிலிருந்து அழகர்கோவில் சாலைக்கு தற்சமயம் கக்கன் சிலை. யூத் ஹாஸ்டல் வழியாக சென்று வரும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும் கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை வழியாக பெரியார் சிலை வந்தடைந்து வலது புறமாக திரும்பி பெரியார் சிலை பாரதியார் பூங்கா, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வழியாக அழகர் கோவில் சாலை செல்ல வேண்டும். மேலூர் சாலையிலிருந்து நத்தம் சாலைக்கு தற்சமயம் கக்கன் சிலை, யூத் ஹாஸ்டல் வழியாக சென்று வரும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும் கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை வழியாக பெரியார் சிலை வந்தடைந்து வலதுபுறமாக திரும்பி பாரதியார் பூங்கா வழியாக PTR சிலை சந்திப்பு வழியாக நத்தம் சாலை செல்லலாம். நத்தம் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் PTR சிலை சந்திப்பு செல்ல அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் SP பங்களா சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பாரதி உலா ரோடு, தாமரைத்தொட்டி சந்திப்பு வழியாக ரேஸ்கோர்ஸ் சாலை, கக்கன் சிலை சந்திப்பு வந்து கோரிப்பாளையம் மற்றும் மேலூர் சாலை செல்லலாம்.

மேற்கண்ட வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி மதுரை மாநகர் வாகன போக்குவரத்து காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

Tags : Traffic change in Madurai from the 20th

Share via

More stories