டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளைபடிக்க முயன்றவர்களை பிடிக்க முயன்ற காவலர்களை தாக்கிவிட்டு தப்பிய கும்பல்.

by Editor / 16-03-2022 09:37:29am
டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளைபடிக்க முயன்றவர்களை பிடிக்க முயன்ற காவலர்களை தாக்கிவிட்டு தப்பிய கும்பல்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கீழவளம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையில் விடியற்காலை 3 மணிக்கு மேல் மதுராந்தகம் போலீசார் சதீஷ்  ரமேஷ் ஆகியோர் ரோந்து பணியின்போது டாஸ்மாக் கடைக்கு சென்று பார்த்தபோது  5 பேர் கொண்ட மர்ம கும்பல் பூட்டை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.அந்த கும்பல் போலீசாரை பார்த்து  தப்பி ஓட முயன்றனர் அப்போது அவர்களை பிடிக்கச் சென்ற காவல்துறையினரை கத்தியால் தாக்கிவிட்டு அவர் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓட்டம் மதுராந்தகம் போலீசார் விசாரணை.

 

Tags :

Share via

More stories