செங்கோட்டையில் குரு தேஜ்பகதூர் 400 வது பிறந்தநாள் விழா நாணயம் அஞ்சல்தலை ஆகியவற்றை வெளியிடுகிறார் மோடி

டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குருபூஜை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இரவு 9 15 மணிக்கு உரையாற்றுகிறார் சீக்கியர் பத்து குருமார்களில் ஒருவரான குரு தேஜ்பகதூர் இன் 400 ஆவது பிறந்தநாள் பிரகாஷ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்று மோடி இன்று உரை நிகழ்த்துகிறார் குருவின்நினைவாக நாணயம் மற்றும் தபால் தலையும் பிரதமர் வெளியிட உள்ளார். குரு தேஜ்பகதூர் இன் வாழ்க்கையை சித்தரிக்கும் பிரம்மாண்டமான ஒளி-ஒலி காட்சியும் கலைநிகழ்ச்சிகளும் நாள் முழுவதும் நடைபெற உள்ளன முன்னதாக நேற்று செங்கோட்டை விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமீத் ஷா நாட்டுக்காகவும் இந்துக்களின் உரிமைக்காகவும் போராடிய முகலாயர் ஆட்சியில் மன்னரால் கொடூரமான மரணம் தண்டனை விதிக்கப்பட்ட குரு தேஜ்பகதூர் பிரதமர் மோடி விழா கொண்டாடி மரியாதை செய்து வருவதாக தெரிவித்தார்
Tags :