லோன் கட்ட- பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

by Staff / 29-04-2022 01:11:15pm
லோன் கட்ட- பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

கன்னியாகுமரி சுற்று வட்டாரப் பகுதிகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபடுபவர்களை, சிசிடிவி கொண்டு தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் அழிகியமண்டபம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது இருவரும் கேரளாவைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் அபி என்றும், பைக் ரேசில் இழந்த பலத்தை பெறவும், லோனில் உள்ள பைக்கை சொந்தமாக்கவும், பெண்களிடம் சங்கிலி பறிப்பில்  ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo