இந்தியவின் முதல் சாதனை பெண்மணி
8,000 மீட்டருக்கு மேல் ஐந்து சிகரங்களை அடைந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையை பிரியங்கா மோஹிதே பெற்றார்.
மேற்கு மராட்டியத்தின் சதாரா பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா மோஹிதே. சிறுவயதில் இருந்தே மலையேறுவதில் ஆர்வம் கொண்ட இவர், பல சிகரங்களை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில், இவர் இன்று இமயமலையில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான மூன்றாவது சிகரம் என்ற பெருமையை கொண்ட காஞ்சன்ஜங்கா சிகரத்தை (8,586 மீ) வெற்றிகரமாக அடைந்தார்.
இதன் மூலம் 8,000 மீட்டருக்கு மேல் உள்ள ஐந்து சிகரங்களை அடைந்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Tags :



















