இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமார் நியமனம்

by Editor / 12-05-2022 11:40:24pm
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமார் நியமனம்

இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமாரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இவர் வரும் 15ம் தேதி பொறுப்பு ஏற்கிறார்.கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா பதவியேற்றார். அவரது தலைமையில், தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை பொதுத்தேர்தல் சிறப்பாக நடைபெற்றுள்ளது.இந்த நிலையில், சுஷில் சந்திராவின் பதவிகாலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இதுநாள் வரை தேர்தல் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரை, புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதனையடுத்து இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் கமிஷனராக வரும் 15ம் தேதி ராஜீவ் குமார் பொறுப்பேற்க உள்ளார்.

 

Tags : Rajiv Kumar appointed new Chief Election Commissioner of India

Share via