அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

1-12ம் வகுப்பு எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும், நவீன தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன்,
மனநலன் அறிந்து செயல்படுவதற்காக, வரும் 18ம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறும்.
அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
மாணவர்களுக்கு ஒரு வாரம் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Tags :