ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததால் காமன்வெல்த் அணியில் இருந்து தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கம்

by Editor / 20-07-2022 05:44:48pm
ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததால் காமன்வெல்த் அணியில் இருந்து தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கம்

ஊக்கமருந்து  சோதனையில் தோல்வி அடைந்ததால் தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அடுத்த வாரம் இங்கிலாந்தில் தொடங்க உள்ள காமன்வெல்த் போட்டிகளில் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் களுக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததால் தற்போது அவர் நீக்கப்பட்டு உள்ளார்.
 

 

Tags :

Share via
Logo