மனைவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தகணவன்

மகாராஷ்டிரா: வசய் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் நடைமேடை வழியே ரயில் வந்துகொண்டிருந்தது. இதை கவனித்த அந்த பெண்ணின் கணவர் திடீரென அவரை இழுத்து சென்று, தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். இதில் அந்த பெண் ரயிலில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த நபர் குழந்தைகளை தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். கணவர் மனைவிக்கு இடையே நடந்த சண்டையே இந்த கொடூர சம்பவத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags :