தமிழக - கேரள எல்லை பகுதியில் யானை மிதித்து ஒருவர் பலி

by Editor / 29-08-2022 10:42:55pm
தமிழக - கேரள எல்லை பகுதியில் யானை மிதித்து ஒருவர் பலி

தமிழக கேரள எல்லையான  தென்காசி மாவட்டம் மேக்கரை வழியாக கேரள மாநிலம் அச்சன்கோவில் வழியாக புனலூருக்கு சென்று விடலாம் இந்த நிலையில் அச்சன் கோவிலில் இருந்து புனலூர் நோக்கி ஒருவர்  சென்றுள்ளார்.அப்போது அவரை வழிமறித்த காட்டு யானை ஒன்று தாக்கி உள்ளது. மேலும் அதே இடத்தில் அவரை மிதித்து கொன்றது. அந்த வழியே சென்றவர்கள் இந்த கொடூர காட்சியை கண்டு  கூச்சலிட அதைத் தொடர்ந்து யானை வனப்பகுதிக்குள் புகுந்துள்ளது இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒற்றை காட்டு யானையால்  இந்தப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது மேலும் தமிழகத்தில் இருந்து அச்சன்கோவில் வழியாக புனலூர் செல்லும் பக்தர்கள் கவனமுடன் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

 

Tags :

Share via

More stories