மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ...இன்று தொடக்கம்
மூவலூர் ராமாமிர்த அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு 698 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதாக 2022-23 வரவு- செலவு கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது .இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். இத்திட்டத்தை ,தங்க சாலை அருகே உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் .தமிழக முதலமைச்சர் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் தொடங்கபட உள்ளது . இந்நிகழ்ச்சியில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார்.
Tags :