விடுதியின் வரவேற்பாளராக பணியாற்றிய இளம்பெண் கொலை.பாஜக முக்கிய தலைவர் மகன் கைது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆரியாவின் ஓய்வு விடுதி உள்ளது. இங்கு வரவேற்பாளராக பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி கொலை செய்யப்பட்டு நதிக்கரையில் விசைப்பாட்டார்.இவரைகாணவில்லையென அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்திய நிலையில் எந்த முன்னேற்றமும் ஏறபடவில்லை.இதனைத்தொடர்ந்து விடுதியின் உரிமையாளர்,மற்றும் மேலாளர்களிடம் கடுமையாக விசாரணை மேற்கொண்டதினால் அவர்கள் கொலைபற்றி தெரியவில்லையென மறுத்த நிலையில் இந்த சம்பவம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.மேலும் பாதிக்கபட்ட பெண்ணின் உறவினர்கள் அந்த விடுதியை தீவைத்து எரித்தனர்.இதனைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின் கொலையில், அந்த பெண் வேலைபார்த்த விடுதியின் முதலாளியான புல்கிட் ஆர்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து புல்கிட் ஆர்யா, விடுதி ஊழியர்கள் இரண்டு பேர் என மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். முதல்வரின் உத்தரவின் பேரில் நேற்று நள்ளிரவில் புல்கிட் ஆர்யாவின் ஓய்வு விடுதியும் இடிக்கப்பட்டது.
Tags :